காதலித்த பெண் கர்ப்பமானார்! ஆனால் அக்காவை கொலை செய்த தம்பி! 10 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமான திடுக் சம்பவம்!

திருச்சி மாவட்டம் துறையூரில் பத்தாண்டுகளுக்கு முன் செவிலியர் மாயமான வழக்கில் அவரை கொலை செய்ததாக உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்


வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சுதா கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு அவருக்கு திருமணமும் நடைபெற்றது.

அவரை சகோதர உறவுமுறை உள்ள யோகேஸ்வரன் என்பவன் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு இரவு பணிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற சுதாவை அதன்பிறகு காணாததால் அவரைத் தேடிய உறவினர்கள் பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர.

ஆனால் போலீசார் அந்த வழக்கை கிடப்பில் போட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு சுதாவின் கணவர் ராஜ்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் அந்த வழக்கில் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு சுதாவின் தந்தை சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தார் ஆனால் விசாரணை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தீவிரமடைந்த நிலையில் சுதாவை வழக்கமாக இருசக்கர வாகனத்தில் விடும் யோகேஸ்வரன் இடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் யோகேஸ்வரன் கூறிய தகவல்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.அப்போது நகைக்காக சுதாவை கொலை செய்ததை அவன் ஒப்புக்கொண்டான்

தனது காதலி கருவுற்றதாகவும் அதை கலைப்பதற்காக சுதாவிடம் நகையை கேட்டதாகவும் அதை சுதா தரமறுத்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்தான்.சுதாவின் தாய்மாமன் உறவு முறையுள்ள ரங்கராஜ் என்ற நபரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு இருவரும்  காரில் சுதாவை கடத்திச் சென்றதாக அவன் கூறினான்.

கொத்தம்பட்டி பாலம் அருகே துப்பட்டாவால் சுதாவின் கழுத்தை நெரித்து இருவரும் கொன்றதாகவும் நகைகளை எடுத்துக்கொண்டு சடலத்தின் தலையை பாறாங்கல்லால் சிதைத்தோடு தடயங்களை அழித்து விட்டு தப்பி வந்து விட்டதாகவும் அவன் தெரிவித்தான். இதையடுத்து ரங்கராஜனையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.