10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4ம் வகுப்பு மாணவியை கற்பழித்த பாஜக தலைவர்..! பள்ளிக்கு சென்றவளுக்கு ஏற்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கேரளா மாநிலத்தில் கண்ணூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட பானூர் என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பத்மராஜன் என்ற 45 வயதான ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியராவார். அதுமட்டுமில்லாமல் இவர் அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பஞ்சாயத்து உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தன்னிடம் பயின்று வந்த ஒரு மாணவியை ஈவிரக்கமின்றி பத்மராஜன் கற்பழித்துள்ளார். ஜனவரி-15 மற்றும் பிப்ரவரி-2 அதுவே நாட்களுக்கு முன்னர் அந்த குழந்தையை இவர் கற்பழித்துள்ளார். அந்த மாணவி சம்பவத்திற்குப் பிறகு இவர் பாதிக்கப்பட்டவர் போன்று வீட்டிலும், வெளியிலும் இருந்து வந்துள்ளார். இதனால் மனைவியின் பெற்றோர் அவருக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்தனர்.
கவுன்சிலிங் செய்த நபர்களிடம் ஆசிரியர் பத்மராஜன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை அந்த மாணவி கண்ணீர் மல்க எடுத்துரைத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மாணவி கூறியதை தெரிவித்தனர்.
உடனடியாக பள்ளி நிர்வாகம் குழந்தைகள் நல தன்னார்வ குழுக்களிடம் புகார் அளித்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினரிடம் மார்ச் மாதம் 16-ஆம் தேதி புகார் அளித்தனர். காவல்துறையினரிடம் புகார் சென்றுவிட்டது தெரிந்துகொண்ட பத்மராஜன் தலைமறைவானார். காவல்துறையினர் பத்மராஜன் பதுங்கி இருப்பதாக கூறி நாட்களை நகர்த்தி வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பின்னரே காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பத்மராஜன் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது பானூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.