சிகிச்சைக்கு வந்த பெண்ணின் 10 பற்களை பிடுங்கி எடுத்த டாக்டர்! உயிரே பறிபோன அதிர்ச்சி சம்பவம்! பரபரப்பு காரணம்!

மருத்துவர் ஒருவர் பெண்ணின் 10 பற்களை ஒரே வாரத்தில் தொடங்கியதால் அந்தப்பெண் இறந்துபோன சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேகசின் கார்டன் என்பவர் பிரிட்டன் நாட்டில் வசித்து வருகிறார். இவருடைய வயது 48. இவர் வசித்து வரும் பகுதியில் துஷார் பட்டேல் என்பவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மேகசின் கார்டன் பல் வலி காரணமாக துஷார் பட்டேலிடம் சென்றுள்ளார். அதன்படி ஜூலை 13-ஆம் தேதியன்று 5 பற்களை பிடுங்கியுள்ளார். மேலும் 18-ஆம் தேதியன்று 5 பற்களையும் பட்டேல் பிடுங்கியுள்ளார்.

இந்நிலையில் ரத்தத்தை உறைய வைப்பதற்கான மருந்தை கார்டன் சாப்பிட்டு வருவதாக கூறிய போதிலும் துஷார் பட்டேல் அதனை கவனிக்கவில்லை. மேலும் பருக்கள் பிடுங்கப்பட்டு இடத்தில் சரியாக தையல் போடவும் இல்லை.

இதனால் 10 பற்கள் பிடுங்கப்பட்ட வாழ்நாளிலேயே ரத்தம் சொட்ட சொட்ட மேகசின் கார்டன் இறந்துள்ளார். இது அவருடைய குடும்பத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் பல் தவறாக பிடுங்கப்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதால், அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் பல் மருத்துவராக பணியாற்றுவதற்கு 1 ஆண்டு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர் இறந்து போனதற்கு காரணமான பல் மருத்துவர் வெறும் 1 ஆண்டுகாலத்திற்கு தடை செய்யப்பட்டிருப்பது மேகசின் கார்டன் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.