மோடியின் வெற்றிக்கும் ராகுல் தோல்விக்கும் 10 காரணங்கள்...

2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கும் எக்ஸிட் போல் முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதுதான் ஆச்சர்யம். இந்த நிலையில் ராகுல்காந்தியின் தோல்விக்கும் மோடியின் வெற்றிக்கும் 10 காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன.


1. பா.ஜ.க.வில் சக்தி வாய்ந்த தலைவரான மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது முன்மொழியப்படவில்லை. அதனால் குழப்பமான ஒரு கட்சியில் இருந்து பிரதமரை தேர்வு செய்ய மக்கள் விரும்பவில்லை.

2. மோடியின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, குமாரசாமி போன்ற தென்னிந்திய தலைவர்கள் தீவிரமாக இருப்பதை வட இந்தியர்கள் விரும்பவில்லை. 

3. புல்வாமா தாக்குதல் நிகழ்வுகளை காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் கிண்டல் செய்ததை மக்கள் விரும்பவில்லை. நாட்டு பாதுகாப்பு என்ற விஷயத்தில் அனைவரும் மோடியின் பின்னே உறுதியாக நின்றார்கள்.

4. ராகுல்காந்தி மனது வைத்திருந்தால் குறைந்த சீட் வாங்கிக்கொண்டு உத்திரப்பிரதேசம், மேற்குவங்காளம், டெல்லி போன்ற இடங்களில் கூட்டணி சேர்ந்திருக்கலாம். அப்போது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தெளிவாக எடுத்துச்சொல்லியும் ராகுலின் ஈகோ விட்டுத்தரவில்லை.

5. தேர்தலுக்காக மட்டும் களமிறங்கிய பிரியங்கா, மோடியை விமர்சனம் செய்ததை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

6. மோடி எதிர்ப்பலை மட்டுமே வெற்றிக்குப் போதும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் நினைத்தன, எதிர்க்கட்சிகளிடம் ஒருங்கிணைந்த செயல்திட்டம் எதுவும் இல்லை.

7. மோடியின் மீது தனிப்பட்ட முறையில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. ரபேல் விவகாரத்தை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

8. சிறுபான்மையினருக்கு ஆதரவாக எதிர்க் கட்சிகள் நின்றதை பெரும்பாலான இந்துக்கள் ரசிக்கவில்லை.

9. திடீரென ராகுல், பிரியங்கா தொடங்கி ஸ்டாலின் வரையிலும் இந்துவாக வேடம் போட்டதை ஓட்டுக்காக என்று மக்கள் புரிந்துகொண்டனர்.

10. இவை எல்லாவற்றையும்விட, பா.ஜ.க.வுக்கு மீண்டும் ஐந்து வருடம் கொடுத்தால்தான், அவர்கள் நினைத்ததை சரியாக செய்யமுடியும் என்று மக்கள் நினைத்து, மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் இந்த வெற்றியைப் பார்க்க வேண்டும்.