தோல்வி பயத்தில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை! வெளியான ரிசல்ட்டில் பாஸ் ஆன பரிதாபம்!

பொதுத் தேர்வு தோல்வி பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட 10ம் வகுப்பு மாணவி பிறகு வெளியான தேர்வு முடிவில் பாஸ் ஆகியுள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ளது தண்டரைப்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சந்தியா அண்மையில் பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.

தேர்வை சரியாக எழுதவில்லை என்று அவ்வப்போது சந்தியா புலம்பியபடியே இருந்துள்ளார். மேலும் தேர்வு முடிவு நாள் நெருங்க நெருங்க அவரது பயம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருந்த நிலையில் காலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். 

இதனிடையே தற்கொலை செய்த சந்தியாவின் தேர்வு முடிவை பார்த்த போது அவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தார். தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி அனைத்து பாடங்களிலும் பாஸ் ஆகியிருந்தது அனைவரையும் கவலை அடைய வைத்தது.