துரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...! டென்ஷனில் தி.மு.க. நிர்வாகிகள்

அரசியல் ஆலோசகரைக் கொண்டு, அவரது வழிகாட்டுதலில் கட்சி நடத்தும் ஒரே இயக்கம் தி.மு.ம. மட்டும்தான். அந்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வழிகாட்டுதல்படி, 10க்கும் மேற்பட்ட சீனியர்களுக்கு தி.மு.க.வில் சீட் இல்லை என்பதுதான் கட்சிக்குள் பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டு இருக்கிறது.


தி.மு.க.வில் 60 வயது, 70 வயது, 80 வயதுக்கு மேற்பட்ட சீனியர்கள்தான் பல முக்கியமான நிர்வாகப் பதவியில் இருக்கிறார்கள். இந்த சீனியர்கள் யாரும் ஆக்டிவ் மோடில் இல்லை என்பது உண்மையான விஷயம்தான். ஆனால், பழைய பந்தாவில் காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறர்கள்.

“இந்த சீனியர் தலைவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் 7 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து விட்டார்கள். இவர்களின் முகம் மக்களுக்கு பழகி அலுத்து சலித்துப் போயிருக்கும். எனவே இவர்களை வைத்து வரும் தேர்தலை சந்திப்பது அவ்வளவு உசிதமாக இருக்காது. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சீட் கொடுத்தால்தான் இலக்கு 200 என்கிற லட்சியத்தை எட்ட முடியும்” என்று திட்டவட்டமாகவே ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

திமுகவின் தற்போதைய பொதுச் செயலாளரான துரைமுருகன் தேர்தலில் போட்டியிடுவதில் பொன்விழா கண்டவர். 1முன்னாள் அமைச்சர்களான பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மொகைதீன்கான், பன்னீர்செல்வம், ஏ.வ.வேலு போன்ற 10த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சீட் வேண்டாம் என்று வயது காரணமாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டாம் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.