என்னது 10 ரூபாய் நாணயம் செல்லாதா? ரிசர்வ் வங்கியே அதிர்ச்சி!

பத்தாண்டுகளின் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய திட்டம் என்றால் அது "பணமதிப்பிழப்பு" என்பதேயாகும்.


மேலும் பணநோட்டுகள் மற்றும் நாணயங்கள் மீது அளவிற்கு அதிகமாக புரளிகள் அவ்வப்போது வெளியாகின்றன. அவற்றுள் பயத்தை உண்டாக்கும் புரளி என்னவென்றால் 10 ரூபாய் நாணயம் செல்லாதென்பதே ஆகும். இந்த புரளி கடந்த ஒரு வருடமாக பரவி வருகிறது. நிறைய கடை முதலாளிகள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற ஐயத்தில் அதனை அதிகளவில் வாங்குவதில்லை.

இந்த நிலையை போக்க ரிசர்வ் வங்கியின் தென் மண்டல பொதுமேலாளர் மோகன் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும் நிகழ்ச்சியை மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தனியார் வங்கியுடன் ரிசர்வ் வங்கியும் இணைந்து  நிகழ்ச்சியை நடத்தியது. அதன் பிறகு நிருபர் ஒருவர் " பத்து ரூபாய் நாணயத்தின் நிலை என்ன" என்று வினவினார்.அதற்கு பதிலளித்த மோகன் அவர்கள், நாணயங்கள் நன்றாக புழங்குகிறது என்றும், எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்றும் கூறினார்.

இந்த பதிலை கேட்டாவது மக்களின் மனதில் உள்ள ஐயப்பாடுகள் நீங்க வேண்டும்!!!