அவசர ஆப்பரேசன்! ரத்தம் எடுத்தே ஆக வேண்டும்! சிணுங்கல் கூட இல்லை!10 மாத குழந்தைக்கு டாக்டர் கொடுத்த ட்ரீட்மென்ட்! கலங்கிய தாய்!

மருத்துவ சிகிச்சையின் போது பிஞ்சு குழந்தையின் கண்களிலிருந்து சொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று ஸ்காட்லாந்து தாயார் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்காட்லாந்து நாட்டில் இன்வென்ஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு மைக் வெம்மிஸ் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஷேனான் வெம்மிஸ். இத்தம்பதியினருக்கு கிரேசி என்ற குழந்தை உள்ளது.

இந்த குழந்தை பிறந்து 10 மாதங்களே ஆகியுள்ளது. இந்த குழந்தை பிறந்தபோது டவுன் சிண்ட்ரோம் என்ற நோயினால் பாதிக்கப்பட்டது. மேலும், சில மாதங்களுக்கு முன்னர் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தைக்கு சிறுநீரக சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையே அடிக்கடி இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

உடலிலிருந்து ரத்தம் எடுக்கும்போது, குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கும். சமீபத்தில் ரெய்க்மோர் மருத்துவமனையில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மருத்துவர் ரியான், நாட் கிங் கோலேயின் (Nat King Cole) பாடலான (Unforgettable) அன்ஃபர்கடெபிள் என்ற பாடலை பாடி குழந்தைகளை அழவிடாமல் பார்த்து கொண்டுள்ளார். குழந்தை சிரித்துக்கொண்டே இருந்துள்ளது.

இதனை வீடியோ பதிவுசெய்த குழந்தையின் தாயார் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மருத்துவருக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர். மருத்துவர் ரியான் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர். இவர் முறைப்படி சங்கீதம் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரியான் கூறுகையில், "மற்றவர்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், குழந்தைகளை அழவிடாமல் இருப்பதற்காக இது போன்ற பாடல்களை பாடுகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.