பிரேமலதாவுக்கு மட்டும் 10 நிமிட அத்திவரதர் தரிசனமா..? கொந்தளிக்கும் பக்தர்கள்!

ஏற்கெனவே விஜயகாந்துடன் சேர்ந்துவந்து அத்திவரதரை தரிசனம் செய்தார் பிரேமலதா.


அப்போது அத்திவரதர் சயன நிலையில் இருந்தார். அந்த தரிசனம் செய்தவர்கள், நின்ற நிலையிலும் தரிசனம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதனால் இன்று மீண்டும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு பிரேமலதா வந்தார். பிரேமலதா அத்திவரதரை அருகே அமர்ந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேல் தரிசனம் செய்தார். இதுதான் பக்தர்களுக்கு கடுமையான கோபத்தை உருவாக்கிவிட்டது.

ஏனென்றால், நின்ற கோலத்திற்கு அத்திவரதர் வந்தது முதல் தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்கிறார்கள். இவர்கள் தரிசனம் முடிப்பதற்கு 8 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது.

இந்த நிலையில் திங்கள் கிழமையில் இருந்து ஐந்து லட்சம் பேர் குவியத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வி.ஐ.பி. வரும் நேரத்திலும் தரிசனம் பாதிக்கப்படுகிறது. ஒருசில நிமிடங்களில் கிளம்பாமல் நீண்ட நேரம் வி.ஐ.பி.கள் தரிசனம் செய்வது இடைஞ்சலாக உள்ளது. பிரேமலதா அடுத்தவர்கள் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் 10 நிமிடங்கள் தரிசனம் செய்ததைக் கண்டு பக்தர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள்.

என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா!