சுர்ஜித்தை தொடர்ந்து பத்தே நாட்களில் தமிழகத்தில் 10 குழந்தைகள் துர் மரணம்..! அதிர வைக்கும் காரணம்!

பெற்றோரின் அஜாக்கிரதையாலும், சமூகத்தின் அக்கரையின்மையாலும் தமிழகத்தில் ஏதும் அறியா அப்பாவி குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.


ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் விழுந்து உயிரிந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 10 நாட்களில் குழந்தைகள் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. 

கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. பின்னர் தூத்துக்குடியில் பெற்றோர் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தையை கவனிக்க தவறியதால் அது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. சென்னையில் மாஞ்சா நூல் கயிற்றால் கழுத்து அறுப்பட்டு குழந்தை அவினவ் பரிதாபமாக உயிரிழந்தது. இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டியில் குழந்தை ஒன்று தவறி விழுந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பு பகுதியில் கார்த்திக், பூங்கொடி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 2 வயது குழந்தை தமிழரசு தாத்தாவுடன் கயிறு திரிக்கும் தொழிற்சாலைக்கு சென்றுள்ளான். கயிறு திரிக்கும் பணியில் குழந்தையின் தாத்தா மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தத்தி தத்தி நடந்து சென்று அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. சிறிது நேரம் கழித்து பேரனை காணவில்லை என தேடிய தாத்தா, குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு பேச்சின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை அந்த குழந்தையின் பாதுகாப்புக்கு பெற்றோரும், சமூகமும் முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதே அனைவரிண் எண்ணமாக இருக்கிறது.