காய்ச்சலுக்கு பலியான குழந்தை! சவப்பெட்டிக்குள் வைத்த போது உயிர் வந்த பரபரப்பு! ஆனால்..? கதறும் பெற்றோர்! காரணம் இது தான்!

இறுதி சடங்கில் குழந்தை உயிருடனிருந்த சம்பவமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அருகே வயலனூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ப்ரீத்தி. இத்தம்பதியினருக்கு கெவின் என்ற 1 வயது குழந்தை உள்ளது.

ஒரு வார காலமாக கெவின் சளி மற்றும் காய்ச்சலாலா தொடர்ந்து அவதிப்பட்டு வந்துள்ளான். சில நாட்களுக்குப் பிறகு இன்று பாஸ்கரன் கெவினை தஞ்சை ராசா மிராசுதார் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு கெவினை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையிலேயே மனம் உடைந்து கதறி அழுதனர். உறவினர்களை அழைத்து இறுதி சடங்கு செய்வதற்காக குழந்தைகளில் சவப் பெட்டியில் வைக்க சென்றனர். அப்போது குழந்தையின் உடலில் லேசான அசைவுகள் ஏற்பட்டுள்ளன.

உடனடியாக உறவினர்கள் மீண்டும் அதே மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றனர். மீண்டும் பரிசோதித்த மருத்துவர்கள் சில நிமிடங்களுக்கு முன்பே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனையின் வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கெவினின் பெற்றோர் கூறுகையில், "காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த குழந்தையை இன்று காலை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அப்போது குழந்தையை சரிவர பரிசோதிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இறுதி சடங்கு செய்வதற்கு சென்ற போது குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்தோம்.

4 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது சில நிமிடங்களுக்கு முன்னால் இறந்துள்ளது. முதல் முறையே சரியாக பரிசோதித்து இருந்தால் எங்கள் குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கும் அவசியமில்லை" என்று கதறி அழுதனர். இந்த சம்பவமானது சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் வாயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.