குடிபோதை தகராறில் ஒரு வயது குழந்தையை மூங்கில் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.40 பணத்திற்காக 15 மாத குழந்தைக்கு மூங்கில் கட்டையால் ஓங்கி ஒரு அடி! பிறகு நேர்ந்த பயங்கரம்!

திருச்சி மாவட்டத்தில் முசிறி என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள தொட்டியம் கல்லுப்பட்டி என்னும் பகுதி உள்ளது. இங்கு ரங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தீஸ்வரன் என்ற 1 வயது 3 மாத குழந்தை உள்ளார். இந்நிலையில் தன்னுடைய நண்பர்களுடன் தெருமுனையில் நேற்றிரவு ரங்கர் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்குள் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. செந்தில் என்ற நண்பர் அருகில் இருந்த ஆனந்த் என்ற மற்றொருவரின் சட்டைப்பையில் இருந்து குடிப்பதற்காக 40 ரூபாய் பணம் எடுக்க முயற்சித்தார். இது பிடிக்காத ஆனந்த் செந்திலிடம் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே சண்டை முற்றிய போது, ரங்கர் தடுக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராவிதமாக அவர் தோளில் இருந்த நித்தீஷ்வரனின் தலையில் செந்தில் மூங்கில் கட்டிக் கொண்டு பலமாக அடித்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்த ரங்கர், விரைவாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே நித்தீஸ்வரன் இறந்து போனதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நண்பர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட குடித்தகராறில் 1 வயது குழந்தை இறந்துள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.