ரூ.80 லட்சம் கொடுத்தா ரூ.1 கோடி! நூதன மோசடியில் கலைஞரின் நெருங்கிய உறவினர்?

500, 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.100 நோட்டுகளாக கொடுத்தால் 20 சதவீத கமிசன் என்று கூறி தொழில் அதிபரை 80 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


அண்மையில் டாக்டர் ஜோதிமணி மற்றும் ஜாகீர் அகமத் தமான் எனும் இருவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இன்று பிரபல நாளிதழில் இந்த செய்தி வெளியாகி தி.மு.க. குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துள்ளது.

டாக்டர் ஜோதிமணி என்பவர், கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் என்பதுதான் அதிர்ச்சி தகவல். தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமான உறவினர் டாக்டர் ஜோதிமணி. இவர் எப்படி மோசடிக் கும்பலுடன் சேர்ந்து கொள்ளை அடித்தார் என்பதை கதை கதையாக சொல்கிறார்கள் போலீஸ்காரர்கள்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாகீர் அகமத் தமான் என்பவர் சௌக்கார் பேட்டை காஸ்மட்டிக் வியாபாரி தினேஷை நேரில் தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் கோடிக்கணக்கில் உள்ளது. உங்களிடம் உள்ள 500, 2000ரூபாய் நோட்டுக்கள் கொடுத்தால் நல்ல கமிஷன் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். 

இதனை நம்பிய காஸ்மட்டிக் வியாபாரி தினேஷ் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை, சன்ரைஸ் அவென்யூவில் உள்ள ஒரு பங்களா வீட்டிற்கு 80 லட்சம் ரூபாயை 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களோடு வந்து இறங்கினார். அதற்கு 1 கோடி ரூபாய் தருவதாக சொல்லப்பட்டதாம். அந்த பங்களா வீட்டில் ஜோதிமணி, ஜாகீர் அகமத் தமான், முனியாண்டி, விக்கேஷ், டேவிட் உள்ளிட்ட 5 பேர் இருந்துள்ளனர்.

தினேஷிடமிருந்து ஆங்கிய பணத்தை எண்ணிப் பார்ப்பதாக கூறி முனியாண்டி, விக்னேஷ், டேவிட் ஆகியோர் வீட்டின் பின்புற கதவு வழியாக 80 லட்சம் பணத்தோடு தப்பியோடிவிட்டனர். நீண்ட நேரம் ஆகியும் மூவரும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தினேஷ் நீலாங்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் நீலாங்கரை காவல்துறையினர் டாக்டர் ஜோதிமணி மற்றும் ஜாகீர் உட்பட இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இவர்களில் டாக்டர் ஜோதிமணி ஸ்டாலினுக்கு நெருங்கிய உறவினர் என்பதும், கருணாநிதியின் மகளான மகள் எழிலரசியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜாகீர் அகமத் தமானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பலரிடம் இவர்கள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 80 லட்சம் பணத்தோடு தப்பிச்சென்ற முனியாண்டி, விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 3 பேரும் எங்கு சென்று இருக்கிறார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

டாக்டர் ஜோதிமணி இதுபோன்று ஏராளமான நபர்களை ஏமாற்றி இருப்பதாக சொல்லப்படுவதால், ஏ.கே.விஸ்வநாதன் தீவிர விசாரணைக்கு உத்தரவு இட்டுள்ளாராம். எந்த நேரமும் டாக்டர் ஜோதிமணி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

அதே நேரம், இந்த விவகாரம் முழுக்க முழுக்க நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு என்றும், கட்சி ரீதியில் அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி விவகாரத்தை காவல் துறை வரை இழுத்துச்சென்றுள்ளது என்றும் தி.மு.க.வினர் கூறுகிறார்கள். எது உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.