மனைவிக்கு வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவன்..! குழந்தை பிறந்த பிறகு அவரை துரத்தும் போலீஸ்! ஏன் தெரியுமா? பெரம்பலூர் அதிர்ச்சி!

மனைவிக்கு வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவரை போலீசார் தேடி வருவதால் அதுகுறித்து அந்த தம்பதியினர் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.


பெரம்பலூரில் துறைமங்கலம் நியூ காலனி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருக்கும் வாடகை வீட்டில் சதீஷ்குமார் மற்றும் பேபி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். பேபி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வீட்டிலேயே இயற்கையான முறையில் குழந்தை பிறந்துள்ளது. இதனைப் பற்றி அறிந்த சுகாதாரத்துறையினர் அந்தப் பெண்மணிக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்று சந்தேகித்து உள்ளனர். இதனையடுத்து பேபி என்ற பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனையின் முடிவில் அவருக்கு உடலில் இரத்த அளவு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பெண்ணை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்தம் ஏற்றிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால் பேபி ரத்தம் ஏற்றிக் கொள்ள மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுகாதாரத்துறையினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப் படுத்தி உள்ளனர். பேபியை அருகில் இருக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்தம் ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இருப்பினும் அந்தப் பெண்மணி இரத்தம் ஏற்றிக் கொள்ள சம்மதம் தெரிவிக்காததால் போலீசார் வலுக்கட்டாயமாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். இதனால் தேவி தன்னுடைய குழந்தை மற்றும் கணவருடன் அவர் இருந்து வந்த வீட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதனை அடுத்து போலீசார் பேபி மற்றும் அவரது கணவரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பேபி குடும்பத்தினர் வசித்து வந்த வாடகை வீட்டை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று கூறி பூட்டி சீல் வைத்து ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.

இதனையடுத்து பேபி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் உடன் இணைந்து புதிதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் பேபியின் கணவர் சதீஷ்குமார், எனக்கு மனைவியும் குழந்தையும் நலமாக உள்ளனர். போலீசார் எங்கள் மீது தவறான வழக்கை பதிவு செய்து சிறையில் அடைக்க பார்க்கின்றனர். என் மனைவியும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். ஆனாலும் வீட்டில் வைத்து இயற்கையான முறையில் என் மனைவிக்கு பிரசவம் பார்த்த ஒரே ஒரு விஷயத்திற்காக சுகாதாரத்துறையினர் பொய்யான வழக்கை எங்கள் மீது சுமத்தி இருக்கின்றனர். ஜனநாயக நாட்டில் வீட்டில் ஒரு பெண் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொண்டது கூட குற்றமா என்று சதீஷ்குமார் அந்த வீடியோவில் கேட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அதிகாரிகள் மிரட்டியதால் தன்னுடைய மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தம்பதியினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.