பெற்ற தந்தையை விட 15 வயது மூத்த நபரை திருமணம் செய்து கொண்ட 10 வயது சிறுமி! அதிர வைக்கும் காரணம்!

குஜராத் மாநிலத்தில் பணத்திற்காக பெற்ற மகளையே தன்னை விட வயது மூத்த நபருக்கு தந்தை திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தில் பனஸ்கந்தாவை சேர்ந்த 10 வயது சிறுமி அதே மாநிலம் அசோர்வாக பகுதியைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு சுமார் 50 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் , திருமணம் குறித்த வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

அது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் திருமணமான நபரின் உறவினர் வீட்டில் இருந்த அப்பெண்ணை மீட்டு குஜராத் மாநிலத்தின் காப்பகம் ஒன்றில் தங்க வைத்துவிட்டு, சிறுமியின் சொந்த கிராமமான பனஸ்கந்தா என்ற பகுதிக்குச் சென்று அவரது தந்தையை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவரது 20 வயதான தந்தை தனது மகளை ரூபாய் ஒன்றரை இலட்சத்திற்கு இடைத்தரகர் மூலம் பேசி விற்றதாகவும், அந்த இளைஞருக்கு தன்னை விட வயது அதிகம் என்றும், 35 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் திருமணத்திற்கு முன் அட்வான்ஸ் பணமாக ஐம்பதாயிரத்தை தருவதாகவும் , திருமணத்திற்கு பின் பேசியபடி மீதமுள்ள ஒரு 1 லட்சத்தை திருப்பி தந்து விடுவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

அதன் பெயரில் திருமணம் முடித்து வைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் திருமணத்திற்கு பின் பேசியபடி ஒரு லட்சம் தராமல் ஏமாற்றியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின் தரகர் மூலம் பெண்ணின் தந்தை மீறினால் வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதன் பெயரில் அமைதியாக பிரச்சினையை கைவிட்டுவிட்டார் அவரது தந்தை. ஆனால் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட படவே அனைவரின் பார்வைக்கும் முன் வந்து தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் பெண்ணை திருமணம் செய்த நபர் இடைத்தரகர் மற்றும் பெண்ணின் தந்தை ஆகிய மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.