27 வயதில் விபச்சார புரோக்கர் ஆன 2 பெண்கள்..! கோவை ஆண்களை சபலத்தில் தள்ளியவர்கள் சிக்கிய பின்னணி!

தனியார் லாட்ஜில் விபச்சாரம் செய்து வந்த பெண்கள் பிரோகர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டத்தில் ராம்நகர் கோகலே என்ற வீதி அமைந்துள்ளது. இந்த வீதியில் தனியார் லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த லாட்ஜில் ஒரு அறையை தனியாக வாடகைக்கு எடுத்து கணபதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (41), காளம்பாளையம் பகுதியை சேர்ந்த காளீஸ்வரி (27), திருப்பூர் பகுதியை சேர்ந்த லதா (27) ஆகியோர் அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு பெண்களின் நடமாட்டம் அதிகரித்து வந்ததால் அக்கம்பக்கத்தினர் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் லாட்ஜுக்கு விரைந்த காட்டூர்  காவல்துறையினர் ரெயிடில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகித்த வாரே அழகிகளை வைத்து 3 புரோக்கர்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.