வேகமாக பரவும் கொரோனா..! தனிமைப்படுத்தப்பட்ட மக்கள்...! இந்தியாவின் வூகான் ஆகிறதா ஈரோடு?

கொரனா பாதிப்பு உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது.


உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரனா அவ்வளவு எளிதில் இந்த பூமியை விட்டு செல்வதாக இல்லை. தன்னால் எவ்வளவு முடியுமோ விரட்டி விரட்டி தொற்று ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் மரணத்தையும் ஏற்படுத்தி நாளுக்கு நாள் பீதியை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் ஆசிய நாடுகளை பொருத்தவரை இதனுடைய தாக்கல் பெரிய அளவில் இல்லை. அதற்குக் காரணம் வெப்பநிலை மாற்றம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை இதை இதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. 

இந்நிலையில் இந்தியாவிலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரனா பரவி தற்போது தமிழகத்திலும் ஆட்டிப் படைக்கிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை மட்டும் தனிமைப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஈரோடு எதற்கு என்ற பலரின் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. டெல்லியில் இஸ்லாமியார்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஈரோடு திரும்பியுள்ளனர். அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கொரனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரனா பரவுகிறது என்று தெரிந்தே டெல்லி மாநாட்டிற்கு ஏன் அனுமதி தரவேண்டும்? முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்விகள் தற்போது மக்களிடையே எழுகிறது. இன்னொரு அதிர்ச்சி தகவல் இந்த மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் விவரத்தை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டோரில் 6 பேர் தெலுங்கானாவில் இறந்துள்ளனர்.

இதனால் ஈரோடு தற்போது முழுமையாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பெரிய அக்ரஹாரம், மரப்பாலம் ஆகிய வீதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 16,456 குடும்பங்களை சேர்ந்த 57,734 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட தெருக்கள் மூடப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.