கோயில் வாசல் பிச்சைக்காரர் திடீர் மரணம்! அவர் சேர்த்து வைத்திருந்த பணம் எவ்வளவு தெரியுமா..? அசந்தே போவீங்க!

ஆந்திர மாநிலத்தில் கோவில் முன்பு பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.


இந்நிலையில் அவரிடமிருந்த உடைமைகளை எடுத்து பார்த்தபோது அதில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர் மற்றும் அந்த பணத்தை கோவிலில் உள்ள மற்ற பிச்சைகாரர்களின் நலனுக்காகவும் மற்றும் கோவில் பணிக்காகவும் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அவர்களிடம் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற புண்ணிய தலமாக விளங்குவது உமா மார்க்கண்டேஸ்வரர் ஆலயமாகும். இந்த கோவிலானது கோதாவரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இங்கு வரும் மக்கள் கோதாவரி ஆற்றில் நீராடி செல்வது வழக்கம்.

இந்நிலையில் கோவிலின் முன்பு பலர் அமர்ந்து பிச்சை எடுத்து வருகின்றனர் அதில் காஞ்சி நாகேஸ்வரராவ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே கோவிலில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளார். சில நாட்கள் சிகிச்சை முடித்துவிட்டு திரும்பவும் பிச்சை எடுக்க வந்துள்ளார்.

திடீரென அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். கோவில் பணியாளர்கள் மற்றும் அருகிலிருந்த பிச்சைக்காரர்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடைமைகளை கோவில் அலுவலர்கள் முன்னிலையில் போலீசார் பிடித்துள்ளனர் அதில் சுமார் 1,83,000 ரொக்கப்பணம் இருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

பின்னர் அதிலிருந்து ரூபாய் 3000 மட்டும் எடுத்து நாகேஸ்வரராவின் இறுதி சடங்கிற்காக பயன்படுத்தினர்.பின்னர் மீதமுள்ள பணத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அதில் அவருடன் அமர்ந்து பிச்சை எடுப்பவர் நலனுக்காகவும் மற்றும் கோவில் சார்ந்த செலவுகளுக்கும் அதை பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.