ரசாயன உரத்திற்குப் பதிலாக சிறுநீர் உரம்! - பாரீஸ் விஞ்ஞானிகளின் பலே ஆராய்ச்சி

ரசாயன உரங்களுக்கு எதற்கு செலவு செய்யவேண்டும், மனித சிறுநீரையே பயன்படுத்தலாமே என லண்டன் தலைநகர் பாரீசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


பாரிஸ் விஞ்ஞானியான பேபின் எஸ்குலையர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கமாக பயன்படுத்தும் ரசாயன உரத்தை ஒரு வயலிலும், மனித சிறுநீரில் இருந்த தயாரிக்கப்பட்ட ரசாயனத்தை மற்றொரு வயலிலும் பயன்படுத்தி காய்கறிகள் பயிரிட்டனர். பின்னர் விளைச்சலின் தரத்தை ஆய்வு செய்தபோது இரண்டிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்ய உள்ளதாகவும் இந்த சோதனை வெற்றி பெற்றால் ரசயானத்துக்கு என தனியாக செலவு செய்யத் தேவை இல்லை என்றும் மனிதர்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.  

ரசயான உரங்களுக்கு பதிலாக மனித சிறுநீரை பயன்படுத்துவதால் ரசயான உரம் தயாரிக்க தேவைப்படும் எண்ணெய் இனி இறக்குமதி செய்யத் தேவை இல்லை. உரத்திற்கு தேவையான பாஸ்பேட்டை பூமியில் இருந்து எடுப்பதால் ஏற்படும் மாசு குறைக்கப்படும்.

உரங்கள் தயாரிக்க தேவையான தனிமங்கள் ஆகிய நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உள்ளன. விலங்குகளை ஒப்பிடும்போது நாள் ஒன்றுக்கு மனிதன் வெளியேற்றும் 5 லிட்டர் சிறுநீரில் 100 முதல் 10,000 மடங்கு வரை ஆண்டிபயாட்டிகள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த ஆராய்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் சிறுநீரை உரமாக்கும் முயற்சியில் தீவிரமாக பிரான்சும் ஸ்விட்சர்லாந்தும் இறங்கி உள்ளன.

சத்து இழக்கும் மண்ணுக்கு வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட ரசாயன உரங்கள் வேதியியல் அடிப்படையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. இவற்றை ரசாயன உரங்கள் என்கிறோம். இவ்வகை உரங்கள் நைட்ரஜன் (தொழிற்சாலையிலும்), பாஸ்பரஸ், பொட்டாசியம் (சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது) போன்ற வேதியியல் பொருளினின்றும் தயாரிக்கப்படுகிறது.

இயற்கை உரம், கலப்பு உரம் இவற்றோடு வேதியியல் உரங்களும் மண்ணிற்குச் சத்தூட்டி தாவரப் பயிர்கள் செழித்து வளர வழி கோலுகின்றன. அறிவியலின் வளர்ச்சி காரணமாக உற்பத்தியைப் பெருக்க, நல்ல தரமான விளைபொருட்கள் கிடைக்க, செயற்கை உரங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கை உரங்களை பொறுத்தவரை மாட்டுச் சாணம், இலை, தழை, எரு, ஆட்டுப் புழுக்கை ஆகியவை நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பைக் கூளங்களை குழியிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது என்ற விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.